என்கிடு Profile picture
Nov 27, 2021 22 tweets 5 min read Read on X
10000ரூ #கிரிப்டோவில் போட்டு ஒரே மாதத்தில் ஒரு லட்சம் ரூபாவாக்கி சம்பாதிக்கலாம்.
#அறிவோம்_கிரிப்டோ

#Beldex னு ஒரு க்ரிப்டோ காய்ன் இருப்பதாக நண்பர் ஒருத்தர் அறிமுகப்படுத்தினார்.
இந்த beldex காய்னுக்கு மிகப்பெரிய மார்கெட் வேல்யூ இருக்கு.
எதிர்காலத்துல மிகப்பெரிய அளவுல
1/n
பிட்காய்ன் விட பெருசா வளரப்போகுது.
புதுப்புது ப்ராஜக்ட்ஸ் எல்லாம் வந்துருக்கு இதானல இன்னிக்கு 8ரூபாவா இருக்குற ஒரு காய்னோட விலை இன்னும்ஒரே வருஷத்துல ஒரு காய்ன் ஒரு டாலர் அளவுக்கு வந்துரும்.

இப்போ இந்த காய்ன்ல எப்படி சம்பாதிக்கலாம்னு சொல்லுறேன்.
இந்த பெல்டெக்ஸ் காய்ன் முழுக்க
2/n
முழுக்க அதோட சொந்த ப்ளாக்செயின்ல வேலை செய்யுது.
அது மட்டுமில்லாம இது ஒரு privacy coin.

இப்ப நீங்க என்ன பண்ணனும்னா இந்த காய்ன Bitcoiva.com அப்படிங்கற ஒரு எக்ஸ்சேஞ்ச்ல வாங்கனும்.
Binanceல ஏன் இது லிஸ்ட் ஆகலனு கேட்காதீங்க அதுக்கு நான் கடைசியா பதில் சொல்றேன்.
3/n
இப்போ இந்த bitcoivaல நீங்க காய்ன் வாங்கனும்.
நீங்க 3000, 5000 & 10kனு ஒரு செட் காய்ன்ஸ் வாங்கிக்கலாம்.
அதாவது இன்னிக்கு ரேட் ஒரு காய்ன் 8ரூ, இப்போ நீங்க 10k coins வாங்குறீங்கனா 8Rs*10000= 80Kக்கு நீங்க காய்ன் வாங்னும்.
உங்களால 10k coin வாங்க முடிலனா 3அல்லது5k வாங்கிக்கலாம்.
4/n
இதை மட்டும் நீங்க வாங்கி வெச்சுட்டீங்கனா ஒரு வருஷத்துல 8ரூ இருக்குற காய்ன் ஒரு டாலர் அதாவது 80ரூ வரை வந்துடும். அப்போ நீங்க போட்ட 80000ரூ, 80*10000 = 8லட்சமா மாறி இருக்கும்.
ஒரே வருஷத்துல 10மடங்கு லாபம். 🔥🔥
5/n
இதுல இருக்குற இன்னொரு லாப நுணுக்கத்தை சொல்லுறேன்.
இது மூலம் இன்னும் அதிகமான லாபம் சம்பாதிக்கலாம்.

க்ரிப்டோல GCCHUB.ORG அப்டின்னு ஒரு மார்கெட்டிங் கம்பெனி இருக்கான்.
இந்த கம்பெனி வெச்சு எப்படி லாபத்தை இன்னும் பெருக்கலாம்னு சொல்லுறேன்.

இப்போ நாம வாங்குன இந்த
6/n
காய்ன நாம இந்த GCCHUB.orgங்கற சைட்டுக்கு ஷேர் பண்ணனும்.
அப்படி பண்ணுனா அந்த மார்கெட்டிங் கம்பெனி நமக்கு 10000 எக்ஸ்ட்ரா காயன் தருவான்.
இப்போ நம்ம கிட்ட 80ஆயிரத்துலயே 80+80=1.60லட்சம் மதிப்பிலான காய்ன் இருக்கும்.
ஆனா இப்போ நமக்கு கிடைச்ச இந்த எக்ஸ்ட்ரா காய்னை நாம
7/n
அன்லாக் பண்ணனும், அப்படி பண்ணலனா அது 120நாள்ல எக்ஸ்பைரி ஆகிடும்.

அதை எக்ஸ்பைரி ஆக விடாம எப்படி அன்லாக் பண்ணி எப்படி லாபம் பாக்கலாம்னு இப்போ சொல்றேன்.
இப்ப நமக்கு எக்ஸ்ட்ராவா கொடுக்குறதா சொன்ன 10k காய்ன அவன் ஒரேடியா தர மாட்டான்.
கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு தான் தருவான்.
8/n
அதை நாம அன்லாக் பண்ண நாம யாரையாச்சும் இதே போல காய்ன் வாங்க சொல்லி ரெஃபர் பண்ணனும்.
இப்போ உங்க காய்ன gcchub.orgக்கு மாத்தினபிறகு உங்களுக்கு கீழ ரெண்டு branch அதாவது கிளை இருக்கும். இப்போ நீங்க அந்தகிளைல ரெண்டு பேர சேந்து விடனும்.
அதாவது உங்கள போலவே 2பேரை 10k coin
9/n
வாங்க வெச்சு அவங்க ஐடிய இதோட சேத்து விடனும்.
அப்படி சேத்து விட்டா ஒருத்தருக்கு 400காய்னுங்கற வீதம் உங்களுக்கு 1600 காய்ன் அன்லாக் ஆகும்.
இப்ப மிச்சம் உள்ள 8400காய்ன எப்படி அன்லாக் பண்ணனும்னா நீங்க சேத்து விட்ட ரெண்டு பேருக்கு கீழ வேற ரெண்டெண்டு பேரு அதாவது 4பேர் சேக்கனும்.
10/n
அதை உங்களுக்கு கீழ இருக்குறவங்க சேத்தாலும் நீங்க சேத்தாலும் லாபம் உங்களுக்கு தான்.
இப்படியே செத்துக்கிட்டே போனா உங்களுக்கு எல்லா காய்னும் அன்லாக் ஆகிடும்.

இப்போ அன்லாக் ஆன காய்ன்ஸ சேத்து 20000 காய்ன் இருக்கும்.
அன்னிக்கு ஒரு காய்னோட விலை 20ரூ ஆகிருந்தாலும் உங்களுக்கு
11/n
நீங்க போட்ட பணத்தை விட டபுள் மடங்கு பணம் வந்துருடும்.
இப்டியே ஆள் சேத்து சேத்து நீங்க ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடலாம்னு........ அப்டின்னு சொல்லிட்டு எவனாவது வந்தா.... செருப்பை கொண்டு காது மேல அறைஞ்சு அனுப்பி விட்டுடுங்க இப்ப நான் சொன்னது மொத்தமும் 100% ஒரு ஃப்ராடு கூட்டம்.
12/n
இப்போ இதுல உள்ள ஃப்ராடுத்தனம் என்னனு ஒவ்வொன்னா சொல்றேன்.
1. இந்த காய்ன் பத்து பைசாவுக்கு பிரயோஜனயில்லாத ஒரு டம்மி காய்ன்.
ஒரு காய்னோட மதிப்பு அவன் எவ்வளவு மதிப்புமிக்க & எண்ணிக்கையிலான ப்ராஜக்ட்ஸ வெச்சுருக்கான்னு வெச்சு தான் அதோட மதிப்பு ஏறும்.
இவன் கிட்ட அது மாதிரியான
13/n
உருப்படியான ஒரு ப்ராஜக்ட்டும் கிடையாது. அதனால இவனுக சொல்ற போல ஒரு காய்ன் ஒரு டாலர் ஆகும்ன்ற மாதிரி நடக்க 100%இப்போதைக்கு வாய்ப்பில்ல.

2. இது ஏன் binanceல இல்லனு அப்பறம் சொல்றேன் சொன்னேனே, இது binance மட்டுமில்ல wazirx, goittus மாதிரி இந்தியன் எக்ஸ்சேஞ்ச்ல கூட எதுலயுமே இல்ல
14/n
நூற்றுக்கணக்கான முக்கிய எக்சேஞ்சஸ்ல எதுலயுமே இல்லாம ரெண்டே ரெண்டு மொக்க எக்ஸ்சேஞ்ச்ல மட்டும் தான் இது லிஸ்ட் ஆகிருக்கு.
ஏன்னா ஒருத்தனும் இதை ஒரு முக்கிய வளர்ந்து வரும் காய்னா மதிக்கவும் இல்ல அதை முக்கிய எக்ஸ்சேஞ்சஸ்ல லிஸ்ட்அவுட் பண்ற எந்த முயற்சிலயும் அவன் ஈடுபடவும் இல்ல.

15/n
3. இதை வாங்க இவனுக பயன்படுத்துற MLM technique.
நாம தங்கம் ஒரு கிராம் வாங்கினா நமக்கு லாபம்னு சொன்னா நாம வாங்குவோம், இதுவே நாம தங்கம் வாங்குனா பக்கத்து வீட்டுக்காரன் லாபம் அடைவான்னு சொன்னா நாம வாங்குவோமா? மாட்டோமில்லயா? இதான் இவனுக டெக்னிக்.
நாம வாங்கினா லாபம் நமக்கு இல்ல
16/n
நம்மள கிளைல சேர்த்தவனுக்கு தான்.
எனக்கு கீழ 2பேரை சேர்த்து நான் லாபமடைவேனேனு நீங்க சொல்லலாம், அதுவும் தப்பு அது ஏன்னு சொல்றேன்.
1. இதுல நம்பகத்தன்மையோட அளவு பூஜ்யம். நம்பகத்தன்மை இல்லாத ஒரு விஷயத்தை எப்போ வேணாலும் மதிப்பற்று போற விஷயத்தை இன்னொருத்தர் தலைல கட்டி லாபமடைய
17/n
நினைத்தல் அறமற்ற செயல்.
2. அப்படி நீங்க செஞ்சாலும் உங்களுக்கு கிடைக்கப்போற அதிகபட்ச லாபமே 10போனஸ் காய்னா அவன் நமக்கு தரதா சொன்னதோட வேல்யூ மட்டும் தான். அதுவுமே கிடைக்குமா கிடைக்காதான்றது ஆண்டவனுக்கு தான் தெரியும்.

4. இதுல உங்கள காசு போட சொல்றவன பேசுறதை நல்லா கவனிங்க...
18/n
காய்னோட பாஸிட்டிவ்ஸ் மார்கெட் வெல்யூ ப்ராஜக்ட்ஸ் பத்தி 10நிமிஷம் பேசிட்டு MLM பத்தி 2மணி நேரம் பேசுவாங்க.. வாசல்ல கார் நிக்குது மோர் நிக்குதும்பானுக.. எனக்கு இதை அறிமுகப்படுத்துனவரு ஹெலிகாப்டர் வாங்கிட்டாரும்பானுக..
ப்ராடக் பத்தி 10நிமிஷமும் பேராசையா 2மணிநேரமும் பேசுவானுக.
19/n
நீங்க சதுரங்க வேட்டை படம் பாத்துட்டீங்க தானே???

5. மார்கெட்ல இருக்குற ஆயிரக்கணக்கான காய்ன்ஸ்ல ஒன்னு 2தான் இன்னும் ஓரிரு மாதங்கள்ல நிலைத்திருக்கும்னும் இது ஒரு சிட்பண்ட் மாதிரியான பிஸினஸ்னு சொல்றாரு ரகுராம் ராஜன்.
இது ஒருசூதாட்டம்னு சொல்றாரு ஆனந்த் சீனிவாசன்.
எப்போ வேணாலும்
20/n
ரெகுலேஷன்ஸ் கொண்டு வந்து முடக்கலாம் அல்லது விதிகள் கொண்டு வரலாம்னு எக்ஸ்பர்ட்ஸ் சொல்றாங்க.
அதுல பிட்காய்னே தாக்கு பிடிக்குமானு தெரியாத நிலைல பேரே தெரியாத நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லா காய்ன்ல காச போட்டு ஏமாறாதீங்க.

21/n
ஈமூ கோழிலயாச்சும் படிக்காதவங்க உலகறிவில்லாதவங்க தான் ஏமாந்தாங்க.
ஆனா இந்த பிட்காய்ன் MLMல படிச்சவங்க தான் ஏமாறுறாங்க...

சூதானமா இருந்துக்கோங்க...
முழிச்சுக்கோங்க... பொழைச்சுக்கோங்க... 💜

22/22

Cc @CryptoNanban

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with என்கிடு

என்கிடு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajiTalks

Apr 29, 2018
ஒரு வழியா #InfinityWar ரிலீஸ் ஆகிடுச்சு.
படத்துல நீங்க கவனிக்க தவறிய விஷயங்கள்,
அடுத்து நடக்கப்போறதுக்காக கொடுத்த Hidden hints,
Climax explanations, Hulk ஏன் படத்துல வரல & இன்ன பிற குறியீடுகள தெரிஞ்சுக்க இந்த த்ரெட்ட ஃபாலோ பண்ணிக்கங்க மக்களே!
1/n
முதல்ல படத்தோட கதைய தெளிவா விளக்கிடலாம்.
தேனோஸ் உலகத்தை அழிக்க Infinity stones தேடிட்டு இருக்கான்.
ஸாண்டர் கிரகத்துக்கு போய் பவர் ஸ்டோன எடுத்துட்டு ஸ்பேஸ் ஸ்டோன தேடிட்டு இருக்கான் தேனோஸ்.
படத்தோட ஆரம்பத்துல ஆஸ்காடுலருந்து வந்த ஷிப்ல எல்லாரும் செத்து கிடக்காங்க.
தேனோஸ் லோகி
2/n
கிட்ட டெசராக்ட்ட கேக்கறான்.
லோகியும் கொடுத்துடுறான்.
அந்த சமயத்துல ஹல்க் தேனோஸ அடிக்க வரான், தேனோஸ் ஹல்க்க செம்மயா அடிச்சு போட்டுடுறான்.
அப்போ ஹெம்டால் ஒரு போர்டல ஓப்பன் பண்ணி ஹல்க்க பூமிக்கு அனுப்பிடுறான்.
தேனோஸ் லோகிய கொண்ணுட்டு டெசராக்ட்ட எடுத்துட்டு அந்த ஷிப்ப
3/n
Read 47 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(