என்கிடு Profile picture
Apr 29, 2018 47 tweets 7 min read Read on X
ஒரு வழியா #InfinityWar ரிலீஸ் ஆகிடுச்சு.
படத்துல நீங்க கவனிக்க தவறிய விஷயங்கள்,
அடுத்து நடக்கப்போறதுக்காக கொடுத்த Hidden hints,
Climax explanations, Hulk ஏன் படத்துல வரல & இன்ன பிற குறியீடுகள தெரிஞ்சுக்க இந்த த்ரெட்ட ஃபாலோ பண்ணிக்கங்க மக்களே!
1/n
முதல்ல படத்தோட கதைய தெளிவா விளக்கிடலாம்.
தேனோஸ் உலகத்தை அழிக்க Infinity stones தேடிட்டு இருக்கான்.
ஸாண்டர் கிரகத்துக்கு போய் பவர் ஸ்டோன எடுத்துட்டு ஸ்பேஸ் ஸ்டோன தேடிட்டு இருக்கான் தேனோஸ்.
படத்தோட ஆரம்பத்துல ஆஸ்காடுலருந்து வந்த ஷிப்ல எல்லாரும் செத்து கிடக்காங்க.
தேனோஸ் லோகி
2/n
கிட்ட டெசராக்ட்ட கேக்கறான்.
லோகியும் கொடுத்துடுறான்.
அந்த சமயத்துல ஹல்க் தேனோஸ அடிக்க வரான், தேனோஸ் ஹல்க்க செம்மயா அடிச்சு போட்டுடுறான்.
அப்போ ஹெம்டால் ஒரு போர்டல ஓப்பன் பண்ணி ஹல்க்க பூமிக்கு அனுப்பிடுறான்.
தேனோஸ் லோகிய கொண்ணுட்டு டெசராக்ட்ட எடுத்துட்டு அந்த ஷிப்ப
3/n
வெடிக்க வெச்சுட்டு அங்கிருந்து கிளம்பிடுறான்.
நான் போய் நோவேர் கிரகத்துல இருக்கற ரியாலிட்டி ஸ்டோன எடுக்கறேன் நீங்க போய் பூமில இருக்குற mind & time stoneஅ எடுத்துட்டு வாங்கனு ப்ளாக் ஆடர பூமிக்கு அனுப்புறான்.
அதே சமயம் பூமில வந்து விழுற ஹல்க், அயன்மேன் & டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
4/n
கிட்ட தேனோஸ் பத்தி சொல்லுறான்.
அதுக்குள்ள இபோனி மாவும், ட்வார்ஃபும் பூமிய தாக்குறாங்க.
அப்போ டாக்டர் கிட்ட இருக்க டைம் ஜெம்முக்காக அவர ஷிப்ல ஏத்திட்டு போயிடுறான் மாவ்.
அவர காப்பாத்த போய் டோனியும் ஸ்பைடர்மேனும் ஷிப்ல ஏறி ஸ்பேஸுக்கு போயிடுறாங்க.
அங்க மாவ கொண்ணுட்டு தேனஸ
5/n
அவன் இடத்துல போய் தான் அழிக்கனும்னு சொல்லிட்டு அந்த ஷிப்ப டைட்டன்ல இறக்குறாங்க.
அதே சமயம் பூமில தலைமறைவா இருக்குற விஷன் & வாண்டாவ கார்வஸும் ப்ராக்ஸிமாவும் தாக்குறாங்க.
அப்ப அங்க வர கேப்டன், ப்ளாக்விடோ, ஃபால்கான் அவங்கள காப்பாத்துறாங்க.
தேனோஸ் வரதுக்குள்ள இந்த ஜெம்ம
6/n
அழிச்சுடலாம்னு சொல்லுறான் விஷன்.
பிரிச்சு எடுக்கலாம் சொல்லுறான் பேனர்.
அதுக்காக அவங்க வகாண்டா போறாங்க.
லோகியோட ஷிப்ப தேனோஸ் தாக்குறப்போ அங்கிருந்து வந்த உதவி செய்திய கேட்டு உதவி செய்ய போற காடியன்ஸ் தேனஷால தாக்கப்பட்ட தோர காப்பாத்துறாங்க.
அங்கிருந்து தேனோஸ அழிக்ககூடிய
7/n
ஆயுதத்த செய்ய ராக்கெட், தோர் & க்ரூட் எல்லாரும் நெடுவில்லர் அப்டின்ற கிரகத்துக்கு போறாங்க.
மத்த காடியன்ஸ் தேனோஸ தடுக்க நோவேர் போறாங்க.
நோவேர் போன இடத்துல ஏற்கனவே ரியாலிட்டி ஸ்டோன எடுத்த தேனோஸ் அங்கிருந்து கமோராவ அவன் கூட தூக்கிட்டு போயிடுறான்.
சோல் ஸ்டோன் இருக்கற இடம்
8/n
கமோராவுக்கு மட்டும் தான் தெரியும் அதனால அவள கூட்டிட்டு வால்மிர்ங்கற கிரகத்துக்கு போறான்.
அங்கஅந்த ஜெம் யாருக்கு வேணுமோ அவங்களுக்கு பிடிச்ச உயிர தியாகம் பண்ணா அது கிடைக்கும்னு தெரியுது அதனால கமோராவ கொண்ணுட்டு சோல் ஜெம்ம கைப்பற்றிட்டு டைட்டனுக்கு வரான் தேனோஸ்.
அங்க காடியன்ஸும்
9/n
டோனி & டீமும் சேந்து தேனோஸ எதிர்க்கிறாங்க.
தேனோஸ் அங்கிருந்து டைம் ஸ்டோன எடுத்துட்டு பூமிக்கு வரான்.
தோர் புது ஆயுதம் கோடாரிய எடுத்துட்டு பூமிக்கு வரான்.
போர் நடக்குது.
தேனோஸ் கடைசியா மைண்ட் ஜெம்மயும் எடுத்துடுறான்.
தோர் தேனோஸ தாக்குறான்.
தேனோஸ் சொடக்கு போடுறான்.
பாதி பேர்
10/n
செத்துடுறாங்க.
படம் இப்டி முடியுது.

எனக்கு இதுல ரொம்ப பிடிச்சதே தேனோஸோட கேரக்டர் டிசைன் தான்.
இது வரை வந்த எந்த படத்துலயும் இவ்வளவு டீட்டெய்லான ஒரு கேரக்டரிசேஷன வில்லனுக்கு கொடுத்ததில்ல.
தேனோஸ் க்விஸ்ட் அப்டின்ற காமிக்ஸ் வெர்ஷன்ல அவன் ஸ்டோன்ஸ தேடுறதுக்கான காரணமே வேற.
11/n
இதுல காட்டுற காரணம் வேற..
இன்னும் சொல்லனும்னா இதுல காட்டுற காரணம் எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துது.
நாம நினைக்கிற மாதிரி தேனோஸ் அவ்வளோ கெட்டவன்லாம் இல்ல... அவெஞ்சர்ஸ விட ரொம்ப நல்லவன்.
அதிக மக்கள் தொகையால அவனோட டைட்டன் கிரகம் அழிவ நோக்கி போயிட்டு இருக்கு.
அந்த சமயத்துல
12/n
எல்லாரும் சாகுறதுக்கு பதிலா பாதி பேர கொண்ணுட்டா மிச்ச பேர் உயிரோட இருக்கலாம் அப்டினு ஒரு ஐடியா தரான் தேனோஸ்.
எல்லாரும் அப்ப அவன mad titanனு சொல்லி ஒதுக்கி அவன் ஐடியாவ நிராகரிச்சுடுறாங்க.
ஆனா கடைசில டைட்டன் மொத்தமா அழிஞ்சுடுது.
அதனால மத்த கிரகங்களயாவது காப்பாத்தனும்
13/n
அப்டின்றதுக்காக பாதி பிரபஞ்சத்த அழிக்கனும்அப்பதான் மத்தவங்கஉயிர் பிழைக்க முடியும்ன்றதுக்காக ஜெம்ஸ தேடுறான்.
ஒருதீவிரவாதி பார்வைலருந்து பாத்தா அவன் கொள்கை நியாயமானது.
பிரபஞ்சத்த சமநிலைல வைக்க நினைக்கிறது மனிதனோட பார்வை கிடையாதுஅது கடவுளோட பார்வை அந்த கனவ தான் தேனோஸ் காணுறான்.
14/n
அடுத்து ரொம்ப பிடிச்சது கமோரா & அவனுக்கு நடுவுல இருக்கற ரிலேஷன்ஷிப்..
நோவேர்ல தேணோஸ கொல்லுறப்போ கமோரா உக்காந்து அழுவா.. அந்த இடத்துல கமோரா தன் வளர்ப்பு தந்தை மேல எத்தனை அன்பு வெச்சுருக்கானு சொல்லுவாங்க. ஆனா கமோரா தேனோஸ் நம்மள ஒரு சோல்ஜரா தான் நினைச்சான் மகளா
15/n
நினைக்கலனு நினைச்சுட்டு இருப்பா.
சோல் ஸ்டோன் வேணும்ங்கறப்போ அவன் நேசிக்கிற உயிர தியாகம் பண்ணனும்ன்ற சிச்சுவேஷன்ல கமோராவ ஒரு பார்வை பாப்பான் தேனோஸ்.
அப்ப தான் கமோராவுக்கே தெரியும்
தேனோஸ் தன்னை இவ்வளவு நேசிச்சுருக்கான்னு.
அந்த சீன்ல கண்ணு கலங்காதவங்க யாரும் இருக்க முடியாது.
16/n
அவ்ளோ நேசிச்ச தன் மகளையே பலி கொடுக்க துணியுறான்னா அவன் கொள்கை எவ்வளவு பயங்கரமானதா இருக்கும்னு பாத்துக்கனும்.

அப்பரம் படத்துல பிடிச்ச இன்னொரு விஷயம்  கேரக்டர்ஸ் & எமோஷன்ஸ் பேலன்ஸிங் தான்.
அதுல நான் ரொம்பவே கலக்கிட்டான்டா மார்வல்னு சொல்லி ரசிச்ச 4விஷயங்கள வரிசையா சொல்லுறேன்.
17/n
முதல் விஷயம்.
தான் ட்ரெய்ன் பண்ற ஒரு பையன் அவனுக்கு தன்னால எதும் ஆகிட கூடாதுங்கற அக்கரை டோனிக்கு எப்போதுமே இருந்துட்டே இருக்கும் பீட்டர் மேல.
அயன்ஸ்பைடர் சூட்ட கொடுத்து அவன வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறது அந்த அக்கரை நல்ல டச்.
கடைசில நான் உயிர் வாழனும்னு பீட்டர் டோனி கிட்ட
18/n
அழுறான்,
அந்த சமயத்துல டோனி உலகத்த பத்தி நினைக்கிறத விட பீட்டர் சாவுக்கு நாம காரணம் ஆகிட்டோமேன்ற குற்றவுணர்ச்சி தான் அதிகம் இருக்கும்.

2வது விஷயம்.
வாண்டா விஷன் லவ்வயும்
கமோரா தேனோஸ் லவ்வயும் ஒரே ப்ளேட்ல வைக்கலாம்.
ரெண்டு பேருமே உலகத்த காப்பாத்த தான் அவங்களுக்கு
19/n
பிடிச்சவங்களோட உயிர தியாகம் செய்யுறாங்க.
அதுவும் அவங்க கையாலயே.
ஒரு பக்கம் தான் நேசிக்கிற காதல், இன்னொரு பக்கம் உலகத்தோட நலன்.
எது வேணும்ங்கற சிச்சுவேஷன்ல ரெண்டு பேருமே தங்களோட சொந்த விருப்பத்த தானே விரும்பி உலகத்துக்காக தியாகம் செய்றாங்க. இந்த plot அட்டகாசம்.
20/n
3வது விஷயம்.
ஸ்டார்லாடு & கமோராவுக்கு நடுல உள்ள லவ்.
இதையும் அதே கமோரா&தேனோஸ், விஷன்&வாண்டா ப்ளேட்ல வைக்கலாம்.
சோல் ஸ்டோன் இருக்கற இடம் கமோராவுக்கு மட்டுமே தெரியும்.
அதனால தேனோஸ் என்ன பிடிச்சுட்டா என்ன கொண்ணுடுனு சொல்லுறா கமோரா.
அதே போல தேனோஸ் கமோராவ பிடிச்சுடுனான்.
21/n
திரும்ப அதே உலக நலனா தன் சொந்த காதலான்ற சமயத்துல தானே விரும்பி தன் கையால கமோராவ சுடுறான் ஸ்டார்லாட்.
இது போல ஒரே எமோஷன பல இடங்கள் பேலன்ஸ் பண்ணது அட்டகாசம்.

4வது விஷயம்.
நான் உலக நலனா இல்ல உன்னோட & பீட்டரோட உயிரானு வந்தா நான் உங்கள இழக்க தயங்க மாட்டேன்னு சொல்லுற டாக்ட்டர்
22/n
கடைசில டோனி உயிருக்காக டைம் ஜெம்ம தானே போய் தேனோஸ் கிட்ட கொடுக்கறான்.
இது போல உலகமா தன் சொந்த விருப்பு வெறுப்பான்ற டீல வெச்சு அதுல ஒன்னோட ஒன்ன மோத விட்டதெல்லாம் செம்ம.

23/n
படத்துல ஹல்க் ஏன் இல்ல!???

இந்த கேள்விக்கு நியாயமான 2பதில் இருக்கு.

ஹல்க் & பேனர் ரெண்டு பேருமே ஒரே ஆள் கிடையாது.
அந்நியன் & அம்பி மாதிரி வேற வேற ஆளுங்க.
ராக்னராக்லயே காட்டிருப்பாங்க 2வருஷம் ஹல்க்கா இருக்கவனுக்கு பேனர யாருனே தெரியாது. அதே போல பேனரா மாறினதும் பேனருக்கு
24/n
2வருஷம் என்ன நடந்துச்சுனே தெரியாது.
ஹல்க்கால பேனர் மாதிரி சிந்திச்சு செயல்பட முடியாது.
அவன் ஒரு முரட்டுத்தனமான குழந்தை.
அநியாயம் நடக்கறப்போ எப்டி அம்பி போய் அந்நியன் வரானோ அப்டி தான்
கோவம் வரப்போ & ஹல்க்குக்கான அவசியம் வரப்போ தான் பேனர் போய்  ஹல்க் வருவான்.
ஆனா
25/n
படத்தோட ஆரம்பத்துலயே தேனோஸ் கிட்ட அடி வாங்கின ஹல்க், அங்க அவன் கண்ணு முன்ன அவ்வளோ பேர் செத்து கிடக்கறத பாக்குறான்.
அதனால மனம் உடைஞ்ச ஹல்க் நான் வந்தும் ஒரு பிரயோஜணமும் இல்ல நான் வர மாட்டேன்னு அடம் பிடிக்குறான்.
அதே சமயம் தேனோஸ் கிட்ட அடி வாங்குற
26/n
பேனர் பயந்து போய் இருக்கான்.
எல்லா சீன்லயும் தேனோஸ பத்தி பேனர் பயந்து பேசுறது பின் வாங்குறது போல காட்டிருப்பாங்க.
அதனால பேனருக்கு எப்போ பயம் போய் கோவம் வருதோ அல்லது தன்னோட தேவை இவங்களுக்கு இருக்குனு ஹல்க்குக்கு தோணுதோ அப்ப தான் ஹல்க் வருவான்.

கதையோட climax நிர்ணயிக்கிறது
27/n
நல்லவங்களுக்குள்ள இருக்க கோவம் தான்.
பீட்டர்க்வில் கோவப்படாம இருந்திருந்தா அங்கயே கையுறைய கழட்டிருக்கலாம்.
ஓப்பனிங்ல தோர் தலையபிடிச்சு நசுக்கற தேனோஸ்&கடைசில தேனோஸ் தலைய நசுக்கற தோர்.
#கர்மா
ஆனாஅங்க தோர் கோவப்படாம நிதானமா தேனோஸ் நெஞ்சுக்கு பதில் தலைய வெட்டிருந்தா தேனோஸ் காலி.
28/n
அடுத்து
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்.
ஒன்றை கோடி தடவை இந்த போர் நடந்துருக்குனு சொல்லுறாரு, எத்தனை தடவ ஜெயிச்சோம்னு டோனி கேட்டதுக்கு ஒரே தடவனு சொல்லுறாரே தவிர அது எப்போனு சொல்லவேயில்ல.
அந்த ஒரு தடவங்கறது இப்ப நடக்கற டைம்லைனா கூட இருக்கலாம்.
அல்லது கொடுத்தா தான் அந்த ஜெயிக்கற
29/n
டைம்லைனுக்கு போக முடியும்ங்கறதுக்காக கூட கொடுத்துருக்கலாம்.
அதனால தான் அவர் ஸ்டோன கொடுத்துட்டாருனு கூட வெச்சுக்கலாம்.
அதாவது டோனி உயிரோட இருந்தா டைம் ஸ்டோன் தேனஸ் கிட்ட இருந்தாலும் நாம ஜெயிச்சுடலாம் ஆனா டோனி செத்துட்டா டைம் ஸ்டோன் தேனோஸ் கிட்ட இல்லனா
30/n
கூட நம்மாள ஜெயிக்க முடியாது.
டாக்டர் ஒரு பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் அவர் யோசிக்காம தூக்கி கொடுப்பாருனு நாம தப்பா நினைக்க கூடாது.

பேனர் கேப்டன பாத்ததும் முதல் வார்த்தை ஹாக்ஐ எங்க இந்த போர்ல ஜெயிக்க அவன் வேணும்னு கேக்குறான்.
கடைசி வரை ஹாக்ஐ & ஆன்ட்மேன காட்டவேயில்ல.
& same time
31/n
அந்த shooting spot picsல ஆண்ட்மேன காட்டிருப்பாங்க.
அவனால குவாண்ட்டம் வேல்டுக்குள்ள போக முடியும்னு ஏற்கனவே நமக்கு தெரியும்.
வரப்போறantman&wasp பார்த்தா இன்னும்தெளிவா புரிஞ்சுடும் ஆண்ட்மேன வெச்சு அடுத்த அவெஞ்சர்ல என்ன பண்ண போறாங்கனு.

படத்தோட ரொம்ப இன்ட்ரஸ்டிங் பார்ட் என்னனா,
32/n
கடைசில எல்லாரும் எங்க மறைஞ்சு போறாங்க!??அப்டின்றது தான்.

ஒரு சீன்ல தேனோஸ் சொல்லுவான்.
என் கைல எல்லா ஸ்டோனும் கிடைக்கும் அப்பரம் நான் பாதி பிரபஞ்சத்த அழிச்சுட்டு சூரிய உதயத்த பாத்துட்டு இருப்பேன்னு.
கடைசில அதான் நடக்கும்.
இங்க இன்னும் 2விஷயத்த கம்பேர் பண்ணி பாக்கனும்.
33/n
#1 டைட்டன்ல டாக்டர் கிட்ட தோனோஸ் சொல்லுவான்.
ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், சின்னவன் வயசானவன்னு பாரபட்சம் பாக்காம பாதி பேர அழிக்கனும்னு நான் யோசனை சொன்னேன்னு.
#2 இன்னொரு சீன்ல குழந்தை கமோரா கிட்ட ஒரு கத்திய கொடுத்து பேலன்ஸ் பண்ண சொல்லுறப்போ ஒன்னு சொல்லுவான்,

34/n
நடுல விரல வெச்சு பேலன்ஸ் பண்ணு ஒரு பக்கம் அதிகமாவும் இன்னொரு பக்கம் கம்மியாவும் இருக்க கூடாது.
ரெண்டு பக்கமும் சமமா இருந்தா தான் பேலன்ஸ் ஆகும்னு.
அதாவது அவன் பாதி பேர அழிக்கிறப்போ நல்லவங்க/கெட்டவங்க மட்டுமோ, ஏழை/பணக்காரன் மட்டுமோ சாகவோ வாழவோ கூடாது.
எல்லா தரப்புலயும்
35/n
எல்லாருலயும் பாதி பேர் சாகனும்.
அப்ப தான் யுனிவர்ஸ் சமநிலைல இருக்கும். இல்லனா முழுசா அழிஞ்சுடும்.
முழுசா அழியுறத தேனோஸ் விரும்ப மாட்டான் ஏன்னா ஏற்கனவே சொன்னது போல அவன் கெட்டவன் கிடையாது நல்லவன் அதுவும் ரொம்ப நல்லவன்.
அவன் விரல சொடுக்கும்போது அங்க 6ஜெம்மும் ஒரே நேரத்துல

36/n
செயல்படுது.
முதல்ல சோல் ஜெம் அந்த மக்கள 2பாதியா பிரிக்கிற வேலைய செய்யுது.
சோல் ஸ்டோனோட சக்தியே ஒரு உயிருக்கு இன்னொரு உயிருன்றது தான்.
அதாவது சமநிலை செய்யுறது.
எல்லாரும் சாகும்போது/காணாம போகும்போது பாக்கலாம்.
ஒருத்தர் நேசிக்கிற இன்னொருத்தர் காணாம போவாங்க.
அதாவது
37/n
கேப்டன்-வைட்உல்ஃப்
ராக்கெட்-க்ரூட்
டோனி-பீட்டர்
தளபதி-டிச்சல்லா
நெப்யூலா-மேன்டிஸ்&டிராக்ஸ்
அதனால அவங்க செத்துட்டாங்கனும் சொல்லிட முடியாது.
ஏன்னா டெசராக்ட் தன்னை நிராகரிச்சுட்டு அதனால நான் சாபம் வாங்கி இந்த கிரகத்துக்கு வந்துட்டேன்னு ரெட்ஸ்கல் சொல்லுவான்.
அதுபோல
38/n
எல்லாரும் வேற எங்கேயோ கடத்தப்பட்டும் இருக்கலாம்.
அடுத்து ரியாலிட்டி ஜெம் அதோட வேலைய செய்யுது.
அதாவது ரெண்டாவது ரியாலிட்டிய உருவாக்குது.
இங்க காணாம போற எல்லாரையும் ரெண்டாவது ரியாலிட்டிக்கு அனுப்புது.
வேற உலகம்னு கூட வெச்சுக்கலாம்.
டாக்டர் நாம ஒரு தடவ தான் ஜெயிச்சோம்னு
39/n
சொன்னது க்ளைமேக்ஸ்ல சாகாதவங்களா காட்டின டைம்லைனா இருக்கனும்.
அந்த டைம்லைன்ல டோனி இருந்தா தான் ஜெயிக்க முடியும்ங்கறதுக்காக தான் டாக்டர் டோனிய காப்பாத்தியிருக்கனும்.
அதாவது அந்த டைம்லைன்ல டோனிய தேனோஸ் கொண்ணுட்டான்.
ஆனா
40/n
அந்த ஒன்ற கோடி வாய்ப்புல ஒரு டைம்லைன்ல நாம ஜெயிச்சதா சொன்னான் இல்லயா, அதுல டோனி அந்த இடத்துல சாகாம இருந்துருக்கனும்.
அதனால டோனி சாகப்போற டைம்லைன்ல அவன் உயிர காப்பாத்தி தோக்கப்போற டைம்லைன அவன் ஜெக்கிறதா சொன்ன 1/1.5million டைம்லைனா மாத்தியிருக்கனும்.
41/n
கிட்டதட்ட எல்லா காடியன்ஸுமே காணாம போயிட்டாங்க. அதனால வரப்போற GOG3 காணாம போனவங்களோட ரியாலிட்டில நடக்கற போல காட்டலாம்.
அவெஞ்சர்ஸ் அடுத்த பார்ட்ல எல்லாரும் எப்டி இந்த ரியாலிட்டிக்கு வந்தாங்கனு சொல்லுற படமாவும் இருக்கலாம்.
ஏன்னா இந்த ரியாலிட்டில 6ஸ்டோன் இருக்குனா தேனோஸ் க்ரியேட்
42/n
பண்ண இன்னொரு ரியாலிட்டில வேற 6ஸ்டோன் இருக்கும் அதை வெச்சு ரெண்டயும் ஒரே டைம்லைனா மாத்துறது கூட அடுத்த பார்ட்டோட கதையா இருக்கலாம்.

படத்தோட ஆரம்பமே எல்லாரும் செத்து கிடக்காங்க ஷிப்லங்கற போல தான் காட்டுறாங்க.
அதுக்கு முன்ன என்ன நடந்துச்சுனு காட்டவேயில்ல.
தேனோஸ் ஷிப்ப பாத்ததும்
43/n
அவங்க தாக்குறதுக்கு முன்னவே பாதி பேர் எதாவது லைஃப்ஷிப்ல தப்பிச்சுருக்கனும் அல்லது ஹெம்டால் பலர ஏற்கனவே டெலிபோர்ட் பண்ணிருக்கனும்.
அவன் ஹல்க்க அனுப்பும்போது கூட "கடைசியா ஒரு தடவ" இத பண்ண அனுமதிங்கனு வேண்டிட்டு தான் பண்ணுறான். அப்போ அதுக்கு முன்ன சிலர
44/n
தப்பிக்க வெச்சுருக்கனும். வல்க்கைரி & சிலர் தப்பிச்சுருக்கலாம். அதுக்கப்பரம் உதவிக்கு காடியன்ஸுக்கு சிக்னல் கொடுத்துருக்கலாம்.

மத்தபடி டாக்டர் ஏன் டைம் ஸ்டோன பயன்படுத்தவேயில்ல, விஷன் ஏன் மைண்டு ஸ்டோன யூஸ் பண்ணி தேனோஸ கட்டுப்படுத்தலங்கறதுக்கெல்லாம் பதில்
45/n
அப்படி பண்ணா தான் திரைக்கதைய விறுவிறுப்பா அமைக்க முடியும்ங்கறதா மட்டும் தான் இருக்க முடியுமே தவிர வேற காரணங்கள் இருக்கும்னு எனக்கு தோணல.
46/n
Post credit scene, captain marvelலோட ஆர்ஜின்லாம் சொல்லலாம்னா இதுக்கே 50/n வந்துடுச்சு.
அதனால அதை இன்னொரு நாள் பேசுவோம்.
சரி... மத்த சந்தேகங்கள கமெண்ட்ல போடுங்க.. முடிஞ்சா இன்னொரு போஸ்ட்டா 😂😂😂😂😂😂😂 போட ட்ரை பண்ணுறேன்.

நன்றி 🙏😎

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with என்கிடு

என்கிடு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajiTalks

Nov 27, 2021
10000ரூ #கிரிப்டோவில் போட்டு ஒரே மாதத்தில் ஒரு லட்சம் ரூபாவாக்கி சம்பாதிக்கலாம்.
#அறிவோம்_கிரிப்டோ

#Beldex னு ஒரு க்ரிப்டோ காய்ன் இருப்பதாக நண்பர் ஒருத்தர் அறிமுகப்படுத்தினார்.
இந்த beldex காய்னுக்கு மிகப்பெரிய மார்கெட் வேல்யூ இருக்கு.
எதிர்காலத்துல மிகப்பெரிய அளவுல
1/n
பிட்காய்ன் விட பெருசா வளரப்போகுது.
புதுப்புது ப்ராஜக்ட்ஸ் எல்லாம் வந்துருக்கு இதானல இன்னிக்கு 8ரூபாவா இருக்குற ஒரு காய்னோட விலை இன்னும்ஒரே வருஷத்துல ஒரு காய்ன் ஒரு டாலர் அளவுக்கு வந்துரும்.

இப்போ இந்த காய்ன்ல எப்படி சம்பாதிக்கலாம்னு சொல்லுறேன்.
இந்த பெல்டெக்ஸ் காய்ன் முழுக்க
2/n
முழுக்க அதோட சொந்த ப்ளாக்செயின்ல வேலை செய்யுது.
அது மட்டுமில்லாம இது ஒரு privacy coin.

இப்ப நீங்க என்ன பண்ணனும்னா இந்த காய்ன Bitcoiva.com அப்படிங்கற ஒரு எக்ஸ்சேஞ்ச்ல வாங்கனும்.
Binanceல ஏன் இது லிஸ்ட் ஆகலனு கேட்காதீங்க அதுக்கு நான் கடைசியா பதில் சொல்றேன்.
3/n
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(