இன்றோடு 7வது நாள்!:(
துக்க மாண்பு நிறையும் காலம்!
1000, 1000 படங்கள்!
எத்தனையோ அரியணைகள்!
ஆனாலும்.. தரையில் அமர்ந்து பேசுதல் போல் வாராது!
கலைஞருக்கு மட்டுமல்ல..
எனக்கும் தான், நட்புக்களோடு.. தரையமர் உரையாடல்!
நடு வகிட்டு நாயகன்! #Kalaignar #Karunanidhi
உன் 1000 1000 வண்ணப் படங்களை விட
சில 100 கருப்பு வெள்ளையே.. உன் அழகைத் தேக்கி நிற்கின்றன!
எழிலேறிய எழிலேரி!
1000 அரசியல் விளையாட்டுக்கள்.. #Kalaignar #Karunanidhi
ஆனால் இப்படியும் ஒரு விளையாட்டா, உனக்குள்?
Cricket பிடிக்குமென்று தெரியும்!
எனக்குப் பிடித்த Tennis உனக்கும் பிடிக்குமென்று.. இன்றே அறிந்தேன்!
Bed Coffee பழக்கம், உனக்கும் உளதா? #Kalaignar #Karunanidhi
நீ கேட்டால் கொடுக்க, இருவர் உளர்!
நான் கேட்டால் கொடுக்க.. நானே தான் போட்டுக் கொள வேணும்:)
என்ன சமையலோ? #Kalaignar #Karunanidhi
சாப்பிடும் போது கூடவா.. தொலைபேசி அருகிருக்க வேண்டும்?
அதுவும் Smartphone இல்லாத காலத்திலேயே?
இன்றைய இளைஞர்களைக் 'கெடுத்ததே' நீ தானோ?:)
உன்னை.. ஏதோ செல்வந்தன் என்று எள்ளுவோர் உளர்!
#Kalaignar #Karunanidhi
ஆனால்.. நீ உறங்கும் அறை, இத்துணைச் சிறிதா?
கட்டில், 'பீரோ' - Middle Class வாழ்க்கையா?:)
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி வாழாது
கட்டில் அருகிலும், புத்தக மேசை தானோ?
சுழலும் புத்தக அடுக்கு, எனக்கும் மிக மிகப் பிடிக்கும்!
நீள அகலமாய் இலாது,
Personal Library - Space Saver! #Kalaignar #Karunanidhi
பழைய முரசொலி அலுவலகக் கட்டடம் தானே?
அந்த நூலகத்தில் தானே,
உன்னைத் 'திடும்'-எனச் சந்தித்தது?
நேருக்கு நேர், முதன் முதலாய்! நம் முதல் சந்திப்பு!😢
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.