KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…
ஓநாய் Profile picture Gunasekaran S Profile picture 2 subscribed
Oct 8, 2018 6 tweets 2 min read
முருகா..
உன் 'பிரசாதம்' (திருவமுது) ஆகிய பன்னீர் சோடா!:))

ஒவ்வொரு முறையும் வடபழனி முருகன்..
எனக்குப் பன்னீர் சோடா தரத் தவறுவதே இல்லை, கோயில் வாசலிலேயே!😍 வெற்றி வேல் முருகனுக்கு..
அரோகரா அல்ல!
ஹரோ ஹரா= Sanskrit Parasite!

வெற்றிவேல் முருகனுக்கு..
"வீரவேல்" என்றே சொல்லுங்கள்!

ஹரோஹரா வேண்டாம்!
கூவத் தான் வேண்டுமென்றால்..
முருகாஆஆஆ என்று கூவினாலே போதுமானது!
Oct 7, 2018 7 tweets 3 min read
இந்திய ஆண்களின் Template-தனங்களில் இதுவும் ஒன்று!😂

இந்தியப் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாக.. கட்டுப்பெட்டித்தனத்தில் இருந்து மீள மீள
அந்தக் குழிக்குள் ஆண்கள் வீழ்வது தான், இப்போதெல்லாம் வாடிக்கையோ?:)

"நல்ல நிலை"யில் இருப்பது.. அவரவர் "மன நிலை" பொருத்த ஒன்றே! அகம் > புறம்! 40 வயதில் கல்லூரிப் பிள்ளை!
50 வயதில் மணமான பிள்ளை!
51 வயதில் பிள்ளையின் பிள்ளை!

இப்படியெல்லாம் கணக்குப் போடுவதில்.. ஒன்று மட்டும் தெரிகிறது: உண்மையான "காதல் வாழ்வு" என்பதே இந்தியச் சமூகத்தின் ஆன்மாவில் இல்லை:(

வெறுமனே Template Life Glorification!😂
Oct 6, 2018 5 tweets 2 min read
இப் பதிவில் இருப்பவற்றை..
வரிக்கு வரி மனதிற் செதுக்கிக் கொள்ளுங்கள்!

எல்லாச் சாதியும், சண்டைச் சச்சரவின்றி 'அமைதி'யாக வாழ வேண்டும் எ. முட்டாள்தனத்துள் விழுந்து விடாதீர்கள்!

சாதி என்பதே ஏற்றத் தாழ்வுச் சண்டை தான்! அதை மனசிலிருந்து முற்றிலும் துறப்பதே, அமைதிக்கு ஒரே வழி! உங்களால் முடிந்த சிறு உதவி!
1. சாதியை.. 'சமூகம்' என்று விளித்து Polish போடவே போடாதீர்கள்!
Polish போடப்போட சாதிநோய், கூச்சம் கடந்து வாழும்!
2. "இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” எ. மேல்தட்டுப் பொய்ப் பிரச்சாரம் யார் செய்தாலும், அவர்களைத் தட்டி அமர்த்துங்கள்!
Oct 6, 2018 4 tweets 2 min read
மாணவனாய்ப் பயின்ற பல்கலைக்கழகத்துக்குப்
பேராசிரியனாய்ச் செல்வது
ஒரு வித இன்ப அச்சத்தையே தருகிறது!:)

உலகப் பல்கலையின் சார்பாக வருகிறேன் என்ற ஒரே காரணத்துக்காக,
பயிற்றுவித்த பேராசிரியர்களே.. வரிக்கு வரி Sir இட்டு அழைப்பதும்,
கொண்டாடுவதும், நம்மையே ஐயம் கேட்பதும்.. நளிர் கூச்சமே!:) கல்விச் சான்றோன் அண்ணா!
அவன் பேரில் அமைந்த பல்கலை நாள், பழைய வாசங்கள்..
சந்தனம் தேய்த்த கல் போல்..
வாழ்வில் வீசிக் கொண்டே இருப்பன!

தொழிற்கல்வியும் கடந்து..
தமிழ்க் கல்வியும், சம்ஸ்கிருதக் கல்வியும் பகுதி நேரங்களாய்க் கழித்த காலங்கள்! அவை இன்றும் இடும் கோலங்கள்!
Oct 6, 2018 6 tweets 2 min read
அதிகாலையில் சேவலை எழுப்பி
அண்ணாவைச் சொல் என்றேன்!:)

தரும மிகு சென்னையில்
வங்கக் கரையில் வளர்
தவம் ஓங்கு அறிஞ வேளே! சென்னை நகரம்..
அதிகாலை வேளைகளில் மட்டும்
'கூடுதல்' அழகு பெறுகிறது!

முதலிரவு முடிந்து..
விடியலில் 'கூடுதல்' அழகு நாணும் பெண் போலவே!:)
Oct 5, 2018 7 tweets 3 min read
புரட்டாசி எனும் புரட்டு+ஆசி 😂

புரட்டாசி மாதத்தில், ஸ்ரீ ராமனே மான்கறி உண்டான்! - வால்மீகி ராமாயணம்!
நீங்க எதுக்குடா விரதம் இருக்கீங்க, Senti கதையில் விழுந்த முட்டாள் பசங்களா!:)

புரட்டாசியின் தமிழ்ப் பெயர்
*புறத்தொய்யை
*புறத்தோயை
*புறத்தோசி
*புரட்டாசி எ. மக்கள் பேச்சுத்திரிபு! 12 மாதங்களின் பெயர்களும்= தமிழே!

*புரட்டாசி (புறத்தோசி) = புறத் தொய்யை (தமிழ்)
*புரட்டாசியின் Sanskrit பெயர் = பாத்ரபதம் / भाद्रपद

புறம் தொய்வதால் = புறத் தொய்யை!
*தொய்யம்= கார் (மழைக்) காலம் முடிந்து, கூதிர் (குளிர்) காலம் தொடங்கல்!
*புறத் தொய்யம்= தொய்யத்துக்குச் சற்று முன்!
Oct 4, 2018 6 tweets 3 min read
தமிழ் திகழ் வணக்கம்!
Now 'officially' in Chennai:)

மா மழை நுழைவு!

*தெய்வம் தொழாஅன்
*மானம் தொழுது எழுவான்
*பெய் எனப்
*பெய்யும் மழை! ஞாயிறு இரவே சென்னை தொட்டு..
திங்கள் வைகறை, கலைஞர் கல்லறை!

*வாழ்த்துக்கும் வசவுக்கும் இடையேயே வாழ்ந்தோய்ந்தவன்!

*திராவிடத் திருக்காட்டில் பூத்த தமிழ்ச் சமூகநீதிப் பூ!

அவன் துயிலிடம் வணங்கிய பின்னரே.. வாழைப்பந்தல் ஊர்ப் பயணம்!
Digital சிக்கல் ஏதுமில்லாக் கிராமத்து 3 நாட்கள்!😍
Oct 4, 2018 6 tweets 4 min read
#ChekkaChivanthaVaanam Logic Holes பற்றி யாரேனும் முன்னமே சொல்லி விட்டார்களா?:)
மணி ரத்தினமா Logic கோட்டை விடுவார்? நம்ப முடியலையே?

கிராமத்திலிருந்து, ஆரணி Town-க்கு வந்து...
Night Show பார்த்தது தான் மிச்சமா? ஐயகோ!:)

AR Rahman குரலில் பாடல்கள் தான், இரவைக் காப்பாற்றினவோ? ஆதலினால் வாக்கு அளிப்பீர்!:)))
Oct 3, 2018 10 tweets 5 min read
வாழைப்பந்தல் கிராமத்து ஐயங்கார் ஆத்துல, இன்று காலை!:)

பழைய 'இன்ப' நினைவுகள்😍

மாமீ.. இட்டிலிக்கெல்லாம் கறிக்கொழம்பு தான் நன்னாருக்கும்! அத்தை, வூட்ல செஞ்சி வச்சிருக்கு!

நான் உங்க ஆத்துல சாப்டுண்டு, அங்கன வேற போய்த் திங்கணும்! என்னை வுட்ருங்கோ மாமி! உங்களவா அன்பே போதும்:)))) ஆனாலும் பாருங்கோ!
இவாளண்டை சம்ஸ்கிருதம் பேசும் போது..

அவாளுக்கே அது தெரியாவிட்டாலும்
அவாள் முகத்துல ஒரு குஷி வர்றது பாருங்கோ😂

1. அஹம் ஏவ பரம் தத்வம்
2. தர்சனம் பேதம் ஏவச
3. உபாயேஷூ பரபத்திஸ்யாத்
4. அந்திம ஸ்மிருதி வர்ஜணம்
5. தேஹாவசானே முக்தி இஸ்யாத்
6. பூர்ணாச்சார்யம் சமாஸ்ரயே
Oct 2, 2018 12 tweets 4 min read
திருக்குறளைப் பிழையாகவே வாசித்த
ஒரு தலைமுறை பெருகி விட்டது!:(

காரணம்: முட்டாள் தமிழாசிரியர்கள் + உரையாசிரியர்கள்

கொழுநன், தொழுதல்..
இச் சொற்களுக்கெல்லாம், அன்றைய பொருளே வேறு!

போற்றி= இன்று ஸ்வாமி கும்பிடும் பொருளாகி விட்டது:(
ஆனால் அன்று? 'போற்றிப்' பாதுகாத்து கூட்டியாந்தேன்! *தெய்வம் தொழாஅள்= கடவுளை/ மதச் சடங்கைப் பாதுகாத்துக் கொண்டு இருக்காமல்

*கொழுநன் தொழுது= தலைவனை/ அகக் கொள்கை பாதுகாத்து

*எழுவாள்= வீறுடன் நிற்பவள்!
*பெய் என= அவள் ஒழுகி நிற்றலைப் போல்

*பெய்யும் மழை= மழையும் ஒழுகிப் பெய்கிறது!

வேற்றுப்பொருள் வைப்பு அணி
Sep 30, 2018 5 tweets 4 min read
தமிழ் திகழ் வணக்கம், அமீரகமே!

துபாய் நகர் செவ்வேள்! விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்குச் சந்து,
துபாய்😂
---

*அண்ணன் பரம்பொருள் @paramporul
*அண்ணார் நிலாவன் @nilaavan
*தோழன் இந்திரன் @iindran
*மாணவன் மைதீன் @doDneedful

மற்றுள்ள துபாய் தோழர்கட்கும்
துபாய் மெரீனாவிலிருந்து, வணக்கம்!:)
Sep 28, 2018 6 tweets 3 min read
மகிழ்ச்சியோ/துயரமோ..
மிகுதியாக வெளிக்காட்டும் பழக்கமில்லை எனக்கு!

ஆனால் இச் சூழலில்..
துள்ளல் மிகு மகிழ்ச்சி!

என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை!:)
பலநாள் காத்திருப்பு, இதை அரங்கேற்ற!

எம் ஐயன் வள்ளுவனே..
உன் மேல் விழுந்த Sanskrit பொய்ம்மைக் கறை யாவும் துடைப்பேன்! துடைப்பேன்! இந்த ஈனப் பாப்பாரச் சிறுக்கன்!

கலைஞரின் மறைவில் இட்ட இந்தப் பொல்லாக் கீச்சு!:(

அப்பவே மனசுல முடிவெடுத்துட்டேன்.. பொதுவெளி அரங்கில், பூநூல் அறுப்பு!
NJ பெரியார் விழாவில் தான் கைக்கூடிற்று!

வாழ்க வள்ளுவம்!
ஒழிக இப் பாப்பாரக் கபோதிகள்!
Sep 27, 2018 4 tweets 2 min read
ஆலம் என்பதே தமிழ்ச் சொல்!
ஆரத்தி/ आरती= Sanskrit Parasite

ஊர்ப் பக்கம், பொண்ணு புள்ளைக்கு ஆலம் கரைச்சி எடு எ. கேள்விப்பட்டதில்லையா?:)

*ஆலம்= யாருக்கு வேண்டுமானாலும் எடுக்கும் தீபம்
*ஹாரத்தி/ ஆரத்தி= அவாள் பகவானுக்கு மட்டுமே காட்டும் தீபம்

இனி, ஆலம் எடு! என்றே புழங்குவோம் ஆரம்+தீ= ஆரத்தி ஆகாது!
ஆரம்= Radius! வட்டம் அல்ல!

*ஆலம்= தமிழ்
*ஆரத்தி/ आरती= Sanskrit Parasite
யாரும் Radiusல ஆரத்தி எடுப்பதில்லை:)

இதான் திரு.ஜெயமோகன் @jeyamohanwriter நம்மைக் கிண்டல் செய்கிறார்!:)

சில அதீதம் மிகு தமிழார்வலர்களால், எள்ளல் விளைகிறது:(
Sep 27, 2018 6 tweets 3 min read
மந்திரம் சடங்குகள் சமயம்...
என்ற நூலை வாசிக்க நேர்ந்தது!

பிழையான முன்முடிவுகள் இருக்கலாம்!
ஆனால், அவற்றை உரசாமல், அவற்றின் மேலேயே கட்டமைத்தால், அழகான கட்டடமும் வீழ்ந்து விடும்!:(

இதை, ஏனோ தே. ஞானசேகரன் ஐயா,
ஆங்காங்கே மறந்து விடுகிறார்..
நல்லதொரு நெல் உணவில், ஆங்காங்கே கல் உமி! பல முறை சொல்லியாகி விட்டது!
மருத நிலத் தலைவன்= இந்திரன் அல்லன்! வேந்தன்!
வேந்தன்= மருத நில மன்னர்கள்;
மாயோன்/சேயோன் போல், ஒருவர் மட்டுமே அல்ல!

வேளாண்மைக்கும் இந்திரனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

உரையாசிரியர்கள் கட்டி வைத்த பொய்யிலேயே உழல்வோம் எ. அடம் பிடிக்கிறார்கள் சிலர்:))
Sep 25, 2018 4 tweets 2 min read
ராஜ ராஜ சோழன் காலத்தில்.. பார்ப்பனீய அதிகாரச் செல்வாக்கு! என்றால்..

அது எப்படிய்யா, ஆனானப்பட்ட மன்னன்.. சாதாரண பார்ப்பானுக்குக் கட்டுப்படுவான்? எ. கேட்போர் கவனத்துக்கு!

அறிவியல் காலத்திலேயே.. இதோ! ஒன்னும் செய்ய முடியலையே?
மன்னராட்சிக் காலத்திலா செய்திருக்க முடியும்?:( பிராமணன் கொலை செய்தால், தூக்கிலிடாதே!
1000ரூ அபராதமே போதும்
மொட்டையடித்து விடு, போதும்

ஏ, ராஜராஜ சோழா
உன் அண்ணன் ஆதித்த கரிகாலனையே கொன்றாலும்
கொன்ற ரவிதாஸன்= பார்ப்பான் என்பதால்

அவனைக் கழுவேற்ற உனக்கு உரிமையில்லை!
மரியாதையோடு/செல்வத்தோடு, நாட்டை விட்டு அனுப்பு!
அஃதே மனு "நீதி"!
Sep 24, 2018 7 tweets 3 min read
சந்தில் உள்ளோர் கவனத்துக்கு!

இந்த அழகுக் குழந்தைகள்.. இலக்கியா & இனியா!
திராவிடர் கழகப் பொறுப்பாளர் ஒருவரின் இல்லக் குழந்தைகள்!

அவர்களின் இசைவு பெற்றே, இதை வெளியிட்டேன்!

வேண்டுமென்றே தான் வெளியிட்டேன்:) சந்தில் உள்ளோர் சிலரின்.. Selective 'போலி நல்லத்தனங்களை' அறிய!😂 "போலி நல்லத்தனம்" என்பது யாது?

*ஆஸ்திக வீட்டில் வளரும் ஒரு குழந்தை..
சூழல் காரணமாக, "ஸ்வாமி பாட்டு" பாடும்போது வராத உறுத்தல்,

*நாஸ்திக வீட்டில் வளரும் இன்னொரு குழந்தை..
சூழல் காரணமாக, "ஸ்வாமி இல்லை" பாட்டு இசைக்கும் போது மட்டும் வருகிறதல்லவா?

அஃதே போலி!
Sep 24, 2018 9 tweets 8 min read
அமெரிக்காவில் முதன்முறையாக..

பேரறிஞர் அண்ணா எழுதிய வெற்றித் தமிழ் நாடகம்!

சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்!
இதோ, உங்கள் முன்னால்!
m.facebook.com/story.php?stor…

பெரியார்-140 @PASCamerica விழாவிலே..
இவ் வீதி நாடக அரங்கேற்றம்! இது low frame recording. Studio Recording வந்ததும் பகிர்கிறேன்! அமெரிக்கா எம்.ஆர்.ராதா கலைக்குழு!

*வீர சிவாஜியாக= @kryes
*மஹா பெரியவா காக பட்டராக= @KanimozhiMV

*மெய்க்காப்பாளன் சந்திரமோகன்= Karthikeyan
*தளபதி சிட்னீஸ்= @Aasifniyaz

*பார்ப்பனீய அமைச்சன் மோரா பந்த்= Venky
*ரங்கு பட்டர்= Prabu
*கேசவ பட்டர்= Dilip
*பாலச்சந்திர பட்டர்= Sabareesh
Sep 22, 2018 4 tweets 2 min read
நேர் நேர் நேர் நேர்= தேமாந்தண்பூ
நேர் நேர் நேர் நிரை= தேமாந்தண்ணிழல்
நேர் நேர் நிரை நேர்= தேமாநறும்பூ
நேர் நேர் நிரை நிரை= தேமாநறுநிழல்

நிரை நேர் நேர் நேர்= புளிமாந்தண்பூ
நிரை நேர் நேர் நிரை= புளிமாந்தண்ணிழல்
நிரை நேர் நிரை நேர்= புளிமாநறும்பூ
நிரை நேர் நிரை நிரை= புளிமாநறுநிழல் நேர்நிரை நேர்நேர்=கூவிளந்தண்பூ
நேர்நிரை நேர்நிரை=கூவிளந்தண்ணிழ*
நேர்நிரை நிரைநேர்=கூவிளநறும்பூ
நேர்நிரை நிரைநிரை=கூவிளநறுநிழ*

நிரைநிரை நேர்நேர்=கருவிளந்தண்பூ
நிரைநிரை நேர்நிரை=கருவிளந்தண்ணிழ*
நிரைநிரை நிரைநேர்=கருவிளநறும்பூ
நிரைநிரை நிரைநிரை=கருவிளநறுநிழ*
Sep 21, 2018 9 tweets 6 min read
விகடன் @vikatan ஈழக் கட்டுரை நன்று! அறம் மிகு நடுநிலை!
ஆனாலும் சில பல தகவற் பிழைகள்:(

திராவிட இயக்கம்/ திமுக / திக
இதிலுள்ள தகவற் பிழை களைந்து,
புதுக் கட்டுரை செய்தால் நலம்!
----
ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வின் பங்கு!
டெசோ முதல் டெசோ வரை!
vikatan.com/news/coverstor… ஈழச் சிக்கல்
பல பேர், பல திசைகளில் இழுத்து விட்ட Rubber band போல்,
பல பரிமாணங்களைக் கொண்டது!:(

தினமுமே அன்னமிட்டவள், ஒருநாள் அன்னமிடாதது.. பெருங் கொடுமையாகச் சோடிக்கப்பட்டாலும்

ஆதி நாளிலிருந்து, இன்று வரை..
தமிழகம்-ஈழம் உறவுச் சிக்கல் முழுதுமான பேச்சு!
vikatan.com/news/coverstor…
Sep 20, 2018 9 tweets 6 min read
நெடுநாள் கனவு!
பேரறிஞர் அண்ணாவின்
சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்,

இந் நாடகத்தை
Next Gen திராவிடம் 2.0 க்கு
கொண்டு சேர்ப்பது எப்படி?

இதோ! அமெரிக்காவிலிருந்து!

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் @PASCamerica
எங்கள், எம். ஆர். இராதா கலைக்குழு அரங்கேற்றம்!

வரும் ஞாயிறு Sep 23 2018 நடிகவேள் எம்.ஆர்.இராதா கலைக்குழு! @PASCamerica

*சந்திரமோகன் = கார்த்திகேயன்
*சிவாஜியாக = @kryes
*காக பட்டர் = @KanimozhiMV

*சிட்னீஸ் = @Aasifniyaz
*மோராபந்த் = வெங்கி

*கேசவ பட்டர் = @saran_io
*ரங்கு பட்டர் = பிரபு
*பாலசந்திர பட்டர் = சபரீஷ்

நாடக இயக்குநர்= @ImSubhashcp
Sep 19, 2018 7 tweets 3 min read
பார்ப்பவன் = பார்ப்பான்!

அரசவையிலே, கணக்கு வழக்கு "பார்த்துக்" கொண்டிருந்த தொழிலே= பார்ப்பனத் தொழில்! Cost Accountant!

பின்பு.. மதம் மூலமாக உள்நுழைந்த பிராமணர்கள், உடலுழைப்பு இல்லா அரசாங்கத் தொழிலெல்லாம் தங்களுக்கே ஆக்கிக் கொண்டதால்.. அவர்கள் மட்டுமே 'பார்ப்பான்' ஆயினர்! பார்ப்பானுக்கு முந்தி பறையன்!

பொருள் என்ன?
பறைதல்= அழுந்தச் சொல்லுதல்!

அரசாங்க முறை, வரிகளை, பிற Procedures
ஊர் ஊராகச் சென்று பறையும் அந்நாள் மாவட்ட Collector-களே= பறையர்கள்!

பறையர்கள் மக்களுக்கு வகுத்ததை,
கணக்கு பார்த்து Budget செய்தோர் பார்ப்பான்கள்!