KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Aug 17, 2018, 16 tweets

ஒரு வேண்டுகோள்:

*தமிழ்நாட்டின் பிற எந்த முதலமைச்சரை விடவும் (அறிஞர் அண்ணா உட்பட)
*ஐயன் வள்ளுவனை 'மிகப் பரவல்' செய்த முதலமைச்சர்= கலைஞர் கருணாநிதியே!

ஆனால் அதற்காக.. "கலைஞர் இல்லையென்றால்
வள்ளுவர் பிரபலம் ஆகியிருக்க மாட்டார்" எ. பேசிவிடாதீர்கள்!

அது கலைஞருக்குத் தான் இழுக்கு:(

கலைஞர் கருணாநிதிக்கு முன்னும் பின்னும்..
ஐயன் வள்ளுவனை
பலரும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்கள்!

*பழைய தமிழகக் காங்கிரஸ்
*கம்யூனிச இயக்கங்கள்
*திராவிட இயக்கம்
*இயக்கம் சாராத் தமிழறிஞர்கள்

அதில், "பெரும் பங்கு" திராவிட இயக்கம்!
திராவிட இயக்கத்திலும், பெரும்பங்கு= கலைஞர்; அவ்வளவே!

Sometimes, the Defender becomes the Worst Offender of a Cause!:(

பேசத் தெரியாமல் பேசி..
* வள்ளுவருக்காக, உண்மையாகவே மிக அதிகம் உழைத்த கலைஞர் கருணாநிதி மேல்
* "துதி தூசு" படரச் செய்வதால், எந்தவொரு பயனும் இல்லை! எ. உணர்க!

மாறாக.. "கலைஞரின் வள்ளுவ முன்னெடுப்புக்கள்" பட்டியல் இடுக!

Bookmark: Very Rare Pic!

ஐயன் வள்ளுவனின் படம்..
*மதம் (பட்டை கொட்டை) நீக்கப்பட்டு
*ஜாதி (பூநூல்) நீக்கப்பட்டு

ஐயன் வள்ளுவன் படம்= தமிழ் அடையாளமாக அரங்கேறிய ஆண்டு= 1964 | காங்கிரஸ், பக்தவத்சலம் ஆட்சி

ஆனால் அதற்குப் பெரிதும் முயற்சி எடுத்தது= அறிஞர் அண்ணா/ திராவிட இயக்கமே!

அன்று அதிகம் பார்த்திராத.. வள்ளுவ உருவம்!

சில நூலில் மட்டுமே இருந்த ஜாதி/மத ஓவியம்!:( அதை விலக்கி..

மக்கள் வெளிக்கு வந்த முதல், வள்ளுவ ஓவியம்!

*ஓவியர்= கே. ஆர். வேணுகோபால் (சர்மா)
*வேண்டியவர்= அறிஞர் அண்ணா, சாண்டில்யன், தமிழ்வாணன்
*திறந்து வைத்தவர்= ஜாகீர் உசேன்/ பக்தவத்சலம்

Bookmark: Rare Document
ஐயன் வள்ளுவன் பொதுவியல் படத்தை..

*அரசாங்கம்
*அரசு அலுவலகங்கள்
*பள்ளிகள்
*உள்ளாட்சி/ பஞ்சாயத்துக்கள்
*பேருந்து.. இன்ன பிற

என்று தமிழக மக்கள் பார்வைக்கு,
ஐயன் வள்ளுவன் உருவத்தைக் கொண்டு செல்ல..

முதலமைச்சர் அறிஞர் அண்ணா வெளியிட்ட அரசாணை! G.O 1193, 1967

தனக்குப் பின் வரும் ஆட்சிகள் எதுவும்..
பின்னாளில் வள்ளுவர் படத்தை விலக்கிவிடக் கூடாது!
எ. ஆழ்ந்த யோசனையின் பேரில்..

முதலமைச்சர் அறிஞர் அண்ணா,

*D-Decade (10 years) முறையில் அரசாணை வெளியிடாது
*MS (Manuscript Permanent) முறையில், எந்த ஆட்சியும் நீக்க முடியாதவாறு அரசாணை! 1967

எதிர்க்கட்சித் தலைவர் + முதலமைச்சர்
அறிஞர் அண்ணாவின் இந்த "வள்ளுவ முன்னெடுப்பை"த் தான்..

கலைஞர் கருணாநிதி,
அரசு முறையில் "பெரும் பரவல்" ஆக்கினார்!

*கோட்டம்
*கட்டடம்
*இயல் - உரை
*இசை
*நாடகம்
*விருது
*பெருஞ் சிலை!

என்று "பெரும்பரவல்" செய்த ஒரே முதலமைச்சர்= கலைஞர் கருணாநிதியே!

/ஐயன் வள்ளுவன்.. பல நாள் பொதுமக்களிடம் செல்லவே இல்லை,
இருபதாம் நூற்றாண்டு வரை!:(
இலக்கிய வட்டத்தில் மட்டுமே குறளுக்கு மிக்க மதிப்புண்டு!

ஆனால் இந்த இலக்கிய வட்டம் தாண்டி,
மக்கள் வட்டம் சென்றது யாரால்? = தந்தை பெரியாரால்!/

(மேல்வரிகள்: திரு.வி.க.. மறைமலையடிகள் உரையாடல்)

தந்தை பெரியார், ஐயன் வள்ளுவனை
இலக்கிய வட்டத்தில் இருந்து,
பொதுமக்கள் வெளிக்கு "இழுத்து விட்ட" பின்னரே..

*பழைய காங்கிரஸ்
*கம்யூனிச இயக்கம்
*நீதிக் கட்சி - திராவிட இயக்கம்

என்று, மக்கள் மேடைகளில், வள்ளுவனைக் கொலுவேற்றத் துவங்கின!
அதில்.. வள்ளுவப் பெருங்காதல்= திராவிடத்துக்கே!

பள்ளி நூல்களில் திருக்குறள் = கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தது அல்ல!:))

அது காங்கிரசுக்கும் முந்தைய, நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தே இருக்கு!

பள்ளிப் பாடம்= இலக்கியம்!
அதையும் தாண்டிய மக்கள் வீச்சு
= இயல், இசை, நாடகம், ஓவியம்
= கோட்டம், கட்டடம், பெருஞ் சிலை
அதுவே கலைஞர் செய்தது!

அறிஞர் அண்ணா அரசாணை: வள்ளுவ அரசு ஓவியம்!

அதைப் பேருந்துகளில் இடம்பெறச் செய்து
*முன்னே= வள்ளுவர் படம்
*பின்னே= வள்ளுவர் குறள்
எ. கலைஞர் கருணாநிதி விரிவு ஆக்கினார்!

பேருந்தில் தொடங்கிய வள்ளுவப் பயணம்
தமிழகத்தின் மூலை முடுக்கெலாம் சென்றது!
கன்னியாகுமரியில் பெருஞ் சிலையாய் நின்றது!

தமிழக மக்கள்வெளி "வள்ளுவ முன்னெடுப்பு"!

*நீதிக் கட்சி & கம்யூனிச இயக்கம்= 10%
*காங்கிரஸ்= 5%

*திராவிட இயக்கம்= 60%
பெரியார்= 10%
அண்ணா= 15%
கலைஞர்= 30%
பிறர்= 5%

*இயக்கம் சாராத் தமிழறிஞர்கள்= 25%
சோமசுந்தர பாரதியார்
திரு.வி.க
மறைமலையடிகள்
மு.வ
பாவாணர்
திருக்குறளார் முனுசாமி

குமரி முனையில், ஐயன் வள்ளுவன்!
Jan 17, 2000 | Millennium

ஊடகச் செய்திகளே அப்போ இல்லையா??? #Doubt
= webcache.googleusercontent.com/search?q=cache…

தமிழ்ச் சந்தில் உள்ளவர்கட்கு வேண்டுகோள்!
Kanyakumari Valluvar Statue Inauguration
திறப்பு விழாப் படங்கள், யாரிடமேனும் இருந்தால்
பகிருங்கள்; நனி நன்றி!

ஏன், இத்துணை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வின்
ஐயன் வள்ளுவன் பெருஞ்சிலை
"திறப்பு விழாச் செய்திகள்/ படங்கள்"..

தமிழ் இணையத்தில் இல்லை?
அட! திமுக தளங்களில் கூட இல்லை!:(((

ஊடக நண்பர்கள், இதை முன்னெடுத்து உதவ முடியுமா?
குறிப்பாக, கலைஞர் கருவூலம்/ அறிவாலயத்தில் பணிபுரிவோர்? #Help

தமிழர், வரலாறு தொலைத்தல் காலங்காலமாய்!
இந்த அறிவியல் காலத்திலுமா?:(

The only news page is broken! Even cache NOT available:(
thehindu.com/thehindu/2000/…

I can only get cache of Kalaignar speaking on Valluvar
17days after INAUGURATION on Jan 1 2000 MILLENNIUM
webcache.googleusercontent.com/search?q=cache…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling